16 August, 2010

XCF - கிம்ப்பின் ஃபைல் ஃபார்மேட்


அடோப் ஃபோட்டோஷாப்பில் PSD என்ற ஃபைல் ஃபார்மேட் பயன்படுத்துவதுபோல் சுதந்திர கிம்ப்பில் XCF என்ற ஃபைல் ஃபார்மேட் பயன்படுத்தப்படுகிறது (default file format).

லேயர் Information-களையும் XCF சேமித்து வைத்துக்கொள்ளும் (File >Save). பின்னால் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இந்த ஃபார்மேட்டில் சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.

JPEG ஃபார்மேட் வேண்டும் என்றால் (சுதந்திர கிம்ப் வெர்ஷன் 2.7.x-ல்) File > Export > Select File Type ( by extension) >JPEG image செலக்ட் செய்துகொண்டு Export கிளிக் செய்யவும்.






Export image as JPEG என்று இன்னொரு விண்டோ வரும். அதில் மறுபடியும் Export பட்டனை கிளிக் செய்தால் போதும்.


JPEG கிடைத்துவிடும்.

08 August, 2010

கிம்ப் (GIMP) பாடங்கள் - ஃபோட்டோஷாப் பிரியர்களுக்காக!


கிம்ப் (GIMP - GNU Image Manipulation Program ) என்பது ஃபோட்டோஷாப் போன்ற ஒரு சுதந்திர மென்பொருள்.

இது Raster graphics editor வகை மென்பொருள்.

விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஸ் மூன்றிலும் கிடைக்கிறது. மூன்றிலும் ஒரே மாதிரிதான் செயல்பாடு இருக்கும். அதனால் இதை விண்டோசில் பழகிவிட்டு எதிர்காலத்தில் லினக்ஸ் வெர்ஷனுக்கு மாறிக்கொள்ளலாம்.


முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன். இதில்  ஃபோட்டோஷாப்
அளவுக்கு வசதிகள் கிடையாது. இருந்தாலும் இருக்கும் வசதிகளை
இலவசமாக அனுபவிக்கலாம்.

சுட்டி http://www.gimp.org/

விண்டோசுக்கான செயலி பெற http://gimp-win.sourceforge.net/stable.html

கோப்பின் அளவு (File Size) 73.3 MB-தான்.

உபுன்டுவில் இருப்பவர்கள் Application>Graphics மெனுவில் இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லாவிட்டால் Application > Ubuntu Software Center போய் நிறுவிக்கொள்ளலாம்.
லினக்சுக்கு பெங்குவின் Tux என்ற பெயரில் சின்னமாக இருப்பதுபோல் கிம்புக்கு "வில்பர்" சின்னமாக இருக்கிறது.

மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்.