17 April, 2011

உபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி?

கிம்ப், ஏன் உபுன்டுவில் சேர்ந்து வருவதில்லை என்பதை போன பதிவில் பார்த்தோம்.

இப்போது கிம்ப்பை உபுன்டுவில் நிறுவது எப்படி என்று பார்க்கலாம்.

க்னோம் டெஸ்க்டாப்பிலிருந்து Applications > Ubuntu Software Center கிளிக் செய்யவும்.


சாஃப்ட்வேர் சென்டர் விண்டோ திறக்கும். அதன் மேல் வலது பக்கத்தில் இருக்கும் பெட்டியில் gimp என்று டைப் செய்து தேடவும். படத்தில் உள்ளதுபோல் கிம்ப் முதலில் தெரியவரும்.


அதை செலக்ட் செய்து More Info கிளிக் செய்யவும்.



இந்த படத்தில் இருப்பது மாதிரி ஒரு விண்டோ வரும். அதில் Install கிளிக் செய்யவும்.


பாஸ்வேர்டு கேட்கும்.



பாஸ்வேர்ட் கொடுத்தபின் நிறுவல் (Installation)ஆரம்பிக்கும்.

நிறுவிய பிறகு எந்த மெனுவில் கிம்ப் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இவ்வாறு காண்பிக்கும்.


Application > Graphics மெனுவிற்கு சென்று கிம்ப் என்ட்ரியை ரைட் கிளிக் செய்து Add this launcher to panel என்று செலக்ட் செய்யவும்.


டெஸ்க்டாப்பின் மேல் பக்கத்தில் இருக்கும் நீள்பட்டையில் (Panel) கிம்ப்பின் Icon சேர்த்துக்கொள்ளப்படும்.



இப்படி செய்தால் Applications மெனுவிற்குள் போகாமல் கிம்ப் ஐகானை பேனலில் கிளிக் செய்து கிம்ப்பை லோடு செய்துகொள்ளலாம்.

கிம்ப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் 30 MB-க்கும் குறைவான இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது (Help ஃபைல்கள் சேர்க்காமல்).

அடோபி போட்டோஷாப் நிறுவும்போது எவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று தெரிந்திருந்தால் சொல்லவும். ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள உதவும்.

இன்றுவரை சுமார் 100 பேர் RSS feed சேர்ந்து இருக்கிறார்கள்.
சுதந்திர மென்பொருட்களின்மீது மக்களின் நம்பிக்கை சிறிதுசிறிதாக வளர்ந்துவருகிறது.

.

3 comments:

  1. நல்ல உபயோகமான பதிவு ...நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. போட்டொ சாப் சுமார் 200 mp அளவு எடுத்துக்கொள்கிறது சார்...

    ReplyDelete