Pages

08 August, 2010

கிம்ப் (GIMP) பாடங்கள் - ஃபோட்டோஷாப் பிரியர்களுக்காக!


கிம்ப் (GIMP - GNU Image Manipulation Program ) என்பது ஃபோட்டோஷாப் போன்ற ஒரு சுதந்திர மென்பொருள்.

இது Raster graphics editor வகை மென்பொருள்.

விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஸ் மூன்றிலும் கிடைக்கிறது. மூன்றிலும் ஒரே மாதிரிதான் செயல்பாடு இருக்கும். அதனால் இதை விண்டோசில் பழகிவிட்டு எதிர்காலத்தில் லினக்ஸ் வெர்ஷனுக்கு மாறிக்கொள்ளலாம்.


முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன். இதில்  ஃபோட்டோஷாப்
அளவுக்கு வசதிகள் கிடையாது. இருந்தாலும் இருக்கும் வசதிகளை
இலவசமாக அனுபவிக்கலாம்.

சுட்டி http://www.gimp.org/

விண்டோசுக்கான செயலி பெற http://gimp-win.sourceforge.net/stable.html

கோப்பின் அளவு (File Size) 73.3 MB-தான்.

உபுன்டுவில் இருப்பவர்கள் Application>Graphics மெனுவில் இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லாவிட்டால் Application > Ubuntu Software Center போய் நிறுவிக்கொள்ளலாம்.
லினக்சுக்கு பெங்குவின் Tux என்ற பெயரில் சின்னமாக இருப்பதுபோல் கிம்புக்கு "வில்பர்" சின்னமாக இருக்கிறது.

மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்.

No comments:

Post a Comment